செய்திகள்

வலிகாமத்தில் 572 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு: சுவாமிநாதன் தகவல்

வலிகாமம் வடக்கு, கிழக்குப் பகுதியில் 572 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரிடம் இருந்து இன்று விடுவிக்கப்பட்ட 575 ஏக்கர் காணியை, அதன் உரிமையாளர்கள் பார்வையிட முடியுமெனவும் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் கூறினார்.

அதன்பின்னர், குறித்த காணிகள் எந்த கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிந்ததன் பின்னர் அவற்றை 20 ஆம் திகதியளவில் மக்களிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்திருந்த 1000 ஏக்கர் காணியில் விடுவிக்கப்படாதிருந்த காணிகள் இன்று விடுவிக்கப்பட்டதாக இராணுவ பதில் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர குறிப்பிட்டார்.