செய்திகள்

வலிகாமம் தென்மேற்கு பகுதியில் தொடரும் கிருமி அகற்றும் நடவடிக்கை

யாழ்ப்பாணம் – வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பல இடங்களில் கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இன்று இடம்பெற்றது.இதற்கமைய இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், வங்கிகள், பொலிஸ் நிலையங்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, தபால் நிலையங்கள் என பல்வேறு இடங்களில் குறித்த கிருமி தொற்று நீக்கி விசுறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

மேலும் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஆனைக்கோட்டை முள்ளிவைத்தியசாலை, மானிப்பாய் கிரீன் வைத்தியசாலை, இளவாலை ஆதார வைத்தியசாலை, பண்டத்தரிப்பு ஆதார வைத்தியசாலை மற்றும் நவாலி பிரதான சந்தை, பண்டத்தரிப்பு பொதுச் சந்தை, சாந்தை சந்தை, மாதகல் பொதுச்சந்தை, இளவாலை பொது சந்தை, மாகியம் பிட்டி பொது சந்தை, காக்கா தீவு சந்தை, சாவல்கட்டு சந்தை, மானிப்பாய் பொதுச்சந்தை ஆகிய பகுதிகளில் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக குறித்த நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட புதிய இயந்திரத் தொகுதியால் கிருமித் தொற்று நீக்கி விசிறும் பணி முன்னெடுக்கப்படுகிறது.சிறப்பு அதிரடிப் படையினர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.(15)1 2