செய்திகள்

வலி வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணி மக்களுக்கு மீள வழங்கப்படும்: விக்னேஸ்வரனிடம் மைத்திரி உறுதி

வலிகாமம் வடக்கில் குறைந்த பட்சம் ஆயிரம் ஏக்கர் நிலத்தையாவது அதன் உரிமையாளர்களுக்குத் திறந்துவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண முதலமைச்சரிடம் இன்று நேரில் உறுதியளித்திருக்கின்றார்.

இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பேச்சுக்களையடுத்து வடமாகாண முதல்வரை தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியபோதே இந்த உறுதியை ஜனாதிபதி வழங்கினார். குறிப்பிட்ட ஆயிரம் ஏக்கர் விரைவில் மக்களுக்காக விடப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.