செய்திகள்

வலி.வடக்கில் இரவோடிரவாக வெட்டப்படும் பயன்தரு மரங்கள்: பிரதேச மக்கள் கடும் அதிருப்தி

வலி.வடக்கில் உயர் பதுகாப்பு வலயமாகவிருந்து அண்மையில் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்ட பிரதேசங்களில் பயன்தரு மரங்கள் இரவோடிரவாகக் களவாடப்படுகின்றன. இதனால் மீள்குடியமர்வுக்கு; தயாராகி வரும் பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அண்மையில் இவ்வாறான திருட்டுச் செயல்களில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இருந்தபோதிலும் குறித்த பிரதேசத்தில் இவ்வாறான திருட்டுக்கள் குறையவில்லை. மேற்படி பிரதேசத்துக்குப் பகல் வேளையில் விறகு பொறுக்குபவர்கள் போன்று செல்லும் திருடர்கள் பிரதேசத்தை நோட்டமிட்டுப் பின்னர்

இரவோடிரவாக மீண்டும் வந்து பலா,வேம்பு,புளியமரங்கள் வெட்டி ஏற்றிச் சென்று விடுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.  பொலிஸார் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (யாழ்.நகர் நிருபர்)