செய்திகள்

வலி.வடக்கில் முன்பள்ளிகளுக்கு நோர்வே சிறுவர் இளைஞர் சுய அபிவிருத்தி நிறுவனம் உதவி

தாயகத்தில் உள்ள சிறுவர் முன்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கான பல நலத்திட்டங்களைச் செய்து வரும் நோhர்வே சிறுவர் இளைஞர் சுயஅபிவிருத்தி நிறுவனம் வலிவடக்கில் உள்ள பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள சிறுவர் முன்பள்ளிகளுக்கு கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி வருகின்றது.

‘அறிவாயுதமே எமது பலம்’ என்ற வாசகத்திற்கு இணங்க இந்நிறுவனம் பன்னாலை கணேசா முன்பள்ளி மாணவர்களிற்கான கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், மாணவர் சீருடைகள் என்பனவற்றை வலிகாமம் வடக்கு பிரதேச துணைதவிசாளர் ச.சஜீவன் மூலம் அண்மையில் வழங்கியுள்ளார்கள். இந்நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு பன்னாலை கிராமமக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்கள்.
யாழ்.நகர் நிருபர்-