செய்திகள்

வல்வெட்டித்துறையில் கண்களைக் கொள்ளைகொண்ட பட்டம் விடும் போட்டி

வல்வெட்டித்துறை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தால் பொங்கல் திருநாளை முன்னிட்டு மிகவும் கோலாகலமான முறையில் நேற்று வியாழக்கிழமை பட்டம் விடும் போட்டி நடைபெற்றது.

பிற்பகல் 2.30 மணிக்கு உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சி.தவராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வினை பிரதம விருந்தினராக வருகை தந்த வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராசா ஆரம்பித்து வைத்தார். சுமார் 53 போட்டியாளர்கள் இந்த பட்டம் விடும் போட்டியில் கலந்துகொண்டனர்.

இந்த போட்டியில் 1ம் இடத்தை தாஜ்மாகல் பட்டமும் , 2ம் இடத்தை லாண்ட் மாஸ்ரர் , 3ம் இடத்தை சைநிஸ் றாகன் பட்டமும் பெற்றுக்கொண்டன.

ஏணைய 16 போட்டியாளருக்கும் ஆறுதல் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரி.எஸ்.மீடின் மற்றும் வல்வெட்டித்துறை கிராம உத்தியோகத்தர் சி.தவனேஸ்வரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் அன்று மாலை மாலை 6.30 மணியளவில் ஊர் மக்களால் மார்கழி மாதத்தில் தினசரி வைக்கப்படும் பிள்ளையாரை வினோத ராட்சத அலங்காரத்துடன் வந்து அகற்றி கடலில் கரைக்கும் வழிபடும் நிகழ்வும் இடம்பெற்றது .

Padim-10-600x450 Padim-11-600x450 Padim-12-600x450 Padim-13-600x450 Padim-14-600x450 Padim-15-600x337 Padim-18-600x450 Padim-19-600x450 Padim-20-600x450 Padim-21-600x450 Padim-22-600x450 Padim-23-600x450 Padim-24-600x800 Padim-25-600x450 Padim-26-600x800 Padim-28-600x450