செய்திகள்

வள்ளுவர் புரத்தில் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் பொது நோக்கு மண்டபம் திறந்து வைப்பு

முல்லைத்தீவு, விசுவமடு, வள்ளுவர் புரத்தில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த மாகாண அபிவிருத்தி நன்கொடையின் கீழ் வடக்கு கிராம அபிவிருத்தித் திணைக்களத்தால் 01 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் வள்ளுவர் புரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட பொதுநோக்கு மண்டபத்தை செவ்வாய் மாலை வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் க.சிவநேசன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

IMG_3577

N5