செய்திகள்

வழிப்பாதைச் சட்டம் அனைத்து நகரங்களுக்கும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது

நாட்டின் அனைத்து நகரங்களிலும் வழிப்பாதைச் சட்டத்தை அமுல்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றது.

இது தொடர்பான போக்குவரத்து முகாமைத்துவம் குறித்த கூட்டமொன்று பொது ஒழுங்கு மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையில் பத்தரமுல்லையில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

கடந்த சில நாட்களாக கொழும்பு நகரில், மேற்படி வழிப்பாதைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் அது வெற்றியளித்துள்ளதை அடுத்தே அச்சட்டத்தை நாட்டின் ஏனைய நகரங்களிலும் அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.