வவுனியாவின் அபிவிருத்தி குறித்து ஆய்வு செய்த வடக்கு ஆளுனர்
வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து வடமாகாண ஆளுனர் கேட்டறிந்து கொண்டதுடன், தேவைகள் குறித்தும் அறிந்து கொண்டார்.
வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே நேற்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு நேற்று வருகை தந்த போதே இது தொடர்பில் கவனம் செலுத்தினார். வவுனியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் திணைக்களத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது, மாவட்ட மட்டத்தின் ஒவ்வொரு திணைக்களத்திற்கும் மத்திய அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் மாவட்ட மட்ட தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பில் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இளங்ககோவன், வடமாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர் சோமசிறி, அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இதன்போது அண்மையில் வவுனியா கொக்குவெளி பிரதேசத்தில் கையளிக்கப்பட்ட இராணுவக் குடியேற்றத்திட்டம், இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை என்பவற்றையும் பார்வையிட்டார்.
N5