செய்திகள்

வவுனியாவில் ஆலயம் அமைக்க தடை போட்ட பிரதேச செயலாளர்: அனுமதி வழங்கினார் அரச அதிபர்

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டப் பகுதியில் ஆலயம் அமைக்க பிரதேச செயலாளர் அனுமதி மறுத்திருந்திருந்த நிலையில், ஆலயத்தை அமைக்க அரச அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் அரச ஊழியர்களால்  வழிபாட்டு தளம் அமைக்க உத்தியோகபூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதியளித்துள்ளார்.
வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் பகுதியில்  வசிக்கும் அரசஊழியர் ஒருவரின் கனவில் கடந்த 18ம்திகதி நாகபூசனி அம்மன் தனக்கு ஆலயம் ஒன்றை அமைக்குமாறும் அமைக்கப்படும் ஆலயத்தில் 41நாள் தொடச்சியாக பொங்கல் வைத்து பூசை செய்யுமாறும் சொல்லபட்டமைக்கு அமைவாக  மக்கள் வழிபாட்டு தளம் ஒன்றை குறித்த வீட்டுத்திட்ட பகுதியில் பொதுத்தேவைகளுக்காக ஓதுக்கப்பட்ட காணியில் கடந்த 19ம் திகதி ஆலயம் ஒன்றை அமைத்தனர்.
அதன் பின் தொடச்சியாக 10 நாள் பொங்கல் வைபவம் நடைபெற்ற நிலையில், கடந்த 29ம்திகதி வவுனியா பிரதேச செயலாளர்  ஓமந்தை கிராமசேவகர் ஊடாக ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  குறித்த ஆலயம் பிரதேச செயகத்தின் அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கோயில் கட்டிடங்கள் எவையும் அமைக்க வேண்டாம் என மக்களிடம் தெரிவிக்குமாறும் உத்தரவு பிறப்ப்பித்திருந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்களுக்கு கிராமசேவகர் தொலைபேசி மூலம் கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த அப் பகுதியைச் சேர்ந்த அரச ஊழியர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தமக்கு வழிபாட்டு தளம் அவசியம் என்றும் தொடந்து அவ் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதழ வழங்குமாறும் கோரினர்.
அதனை ஏற்றுக் கொண்ட வவுனியா அரசாங்க அதிபர் ஒரு ஏக்கர் காணியில் வழிபாட்டுதளம் அமைக்க அனுமதி வழங்கியதோடு தொடர்ந்து பூசை வழிபாடுகளை செய்யவதற்கும் அனுமதி அளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த காணி அடங்கலாக பொதுக் காணி சிலவற்றை தம்வசப்படுத்த பிரதேச செயலாளர் முன்னர் முயன்றிருந்திருந்த நிலையில் அரச அதிபரின் துணையுடன் அவ் இப் பகுதி மக்களால் தடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.