செய்திகள்

வவுனியாவில் இன்றும் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

கொலை செய்யப்பட்ட புங்குடுதீவை சேர்ந்த மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகளை ஆஜராக வேண்டாம் என்று வலியுறுத்தியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வவுனியாவில் அனைத்து பாடசாலைகளிளும் இன்று 11 மணியிலிருந்து 12 மணிவரை அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

குறிப்பாக, வவுனியா புதுக்குளம் மத்திய மகாவித்தியாலம் , வவுனியா தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள், செட்டிகுளம் மகாவித்தியாயலயம், பூந்தோட்டம் மகாவித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் உட்பட பல பாடசாலைகளிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Vavuniya (2)