செய்திகள்

வவுனியாவில் ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் கைதாகி இரு மணி நேரத்தின் பின் விடுதலை

வவுனியாவில் இடம்பெற்ற ஹர்த்தால் நடவடிக்கையை புகைப்படம் பிடித்த ஊடகவியலாளர் உள்ளிட்ட நால்வர் வவுனியா பொலிசாரால் கைதாகி இரு மணித்தியாலயத்தின் பின் இன்று விடுதலை செய்யபப்பட்டுள்ளனர்.

வித்தியா படுகொலைக்கு நீதி கோரி வவுனியாவில் ஹர்த்தால் இடம்பெற்று வருகின்றது. இதன் போது திருநாவற்குளம் பகுதியில் உள்ள பிரதான வீதியில் சிலர் ரயர்களைப் போட்டு எரித்து போக்குவரத்துக்கு தடையை ஏற்படுத்தினர். இதனை அப் பகுதிக்கு சென்ற பத்திரிகை ஒன்றின் பிராந்திய ஊடகவியலாளர் மற்றும் அப் பகுதியால் வந்த மூன்று இளைஞர்கள் புகைப்படம் பிடித்ததாக தெரிவித்து அவர்கள் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் வன்னி எம்.பி வினோதராதலிங்கம் ஆகியோர் பொலிசாருடன் தொடர்ந்து கதைத்ததையடுத்து இரு மணித்தியாலயத்தின் பின் அவர்கள் நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.