செய்திகள்

வவுனியாவில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்களம் சாம்பல்தோட்டம் பகுதியில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 10 வயதுடைய சிறுவனின் சடலமொன்று வீட்டின் பின்புறத்தில் இருந்து மீட்கப்பட்டது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை மீட்கப்பட்ட இச் சடலம் 10 வயதுடைய ச்திரசேகரன் சஞ்சய் என அடையளம் காணப்பட்டுள்ளதுடன் சிறுவன் எவ்வாறு கொலை செய்யப்பட்டான் என்பது தொடுர்பில் விசாரணைகளை வவுனியா பொலிஸார் முடுக்கி விட்டுள்ளனர்.

இதேவேளை இச் சிறுவன் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள நிலையில் பாசாலையில் வகுப்புகளை நிறைவு செய்து வந்தபின்னர் தாயார் உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டிற்கு 6 வயதுடைய குழந்தையுடன் சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கிவந்து வீட்டிற்குள் வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

DSC02420