செய்திகள்

வவுனியாவில் காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றம்

வவுனியா பொலிஸ் பிரிவிலிருந்த நான்கு காவலரண்கள் நேற்று வெள்ளிக்கிழமை முதல் பொலிஸ் நிலையங்களாக இயங்க ஆரம்பித்துள்ளன.

அதிகரித்துள்ள மக்கள் சனத்தொகையை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இதன்படி உழுக்குளம், பரயனாளன்குளம், பூவரசன்குளம், மாமடு ஆகிய காவலரண்கள் பொலிஸ் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இதுவரையான காலப்பகுதியில் இவை வெறும் காவலரண்களாக மாத்திரம் இயங்கி வந்தாக குறிப்பிடப்படுகிறது.