செய்திகள்

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் கைதானவர் நீதிமன்றில் ஆஜர்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் வைத்து கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார் என மாவட்ட மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.இரகுநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

மதுவரித் திணைக்களத்தின் வடமாகாண உதவி ஆணையாளர் சுமேத வசந்த சிறியின் பணிப்புரைக்கமைய வவுனியா மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் வைத்து கடந்த திங்கள்கிழமை 830 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை நேற்றைய தினம் நீதிமன்றில் முற்படுத்தினோம்.

குறித்த நபரிடம் இருந்து நீதிமன்றத்தினால் பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டது. எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.