செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, மகாறம்பைக்குளம், வீரபத்திரர் கோவில் வீதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தரின் வீட்டுக்கு முன்னால் உள்ள மாமரம் ஒன்றிலேயே இவ்வாறு தூங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சின்னத்துரை தயாளன் (வயது 43 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியாப் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சடலம் காணப்பட்ட அவரது வீட்டு முன் விறாந்தையில் கத்தி, சாராயப் போத்தல்கள், சோடாப்போத்தல் என்பனவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

N5