வவுனியாவில் நடைபெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழாவும் கலாசார பேரணியும்
வட மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் கடந்த 02.11.2014 அன்று வடமாகாண பண்பாட்டு விழா வவுனியாவில் நடத்தப்பட்டது. இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.சத்தியசீலன் அவர்கள் தலைமை தாங்கியிருந்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ். சிங்கள.முஸ்லிம் கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் நாட்டிய நாடகங்கள். நடனங்கள். சங்கீத நிகழ்வுகள் என்பன நடைபெற்றதோடு இறுதி நாள் சிறப்பு நிகழ்வில் தமிழர் கலை. கலாசாரங்களை பிரதிபலிக்கும் வகையில் கலாசார நடனங்கள். கலாசார பண்பாடுகளை தாங்கிய ஊர்திகள் என்பனவும் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து பேரணியாக நகர்ந்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கால்லூரியை வந்தடைந்திருந்தது.
அத்துடன் வடமாகாணத்தின் சிறந்த எழுத்தாளர்கள். கலைஞர்கள் ஆகியோரை ஊக்கிவித்து இவ்வாண்டுக்கான முதலமைச்சர் விருதுகளும் வழங்கப்பட்டன. வடமாகாண கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன்.ம.தியாகராஜா.இ.இந்திரராஜா.வடமாகாண கலாசார திணைக்கள பணிப்பாளர் உசா சுபலிங்கம். அரச அதிகாரிகள். வவுனியா. மன்னார். யாழ். முல்லைத்தீவு.கிளிநொச்சி மாவட்ட கலைஞர்கள். மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.