செய்திகள்

வவுனியாவில் நாளை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நாளையும், நாளை மறுதினமும் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதன்போது காணாமல் போனமை தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டவர்களை சாட்சியமளிக்க வருமாறு காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர் கடிதங்களை அனுப்பியுள்ளனர். இதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், கடிதங்கள் கிடைக்கப் பெற்றவர்களை வருகை தந்து சாட்சியங்களை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

N5