செய்திகள்

வவுனியாவில் நெல் கொள்வனவை 4000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்குமாறு கோரிக்கை

வவுனியா மாவட்டதில் பெரும்போக நெற் செய்கைக்கான நெற் கொள்வனவை 4000 மெற்றிக் தொன்னாக அதிகரிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் பதினைந்தாயிரம் வரையிலான விவசாய குடும்பங்கள் உள்ள நிலையில் ஏழாயிரம் பேர் அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெல்லினை கொள்வனவு செய்ய விண்ணப்பித்திருந்தனர். அரச சுற்று நிருபத்திற்கு அமைவாக விவசாயி ஒருவரிடம் இருந்து 2000 கிலோ கிராம் வீதம் 3000 மெற்றிக் தொன் நெல்லினையே கொள்வனவு செய்ய முடியும். இதனடிப்படையில் 1500 விவசாயிகளே நெல்லினை அரசாங்கத்திற்கு கொடுக்க முடியும். இதனால் விண்ணப்பித்த பல விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

இதன்காரணமாக வவுனியா மாவட்டத்தில் 3000 மெற்றிக் தொன்னுக்கு மேலதிகமாக 1000 மெற்றிக் தொன் நெல்லினை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் அரசாங்க அதிபர் மற்றும் நெற் சந்தைப்படுத்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை வவுனியாவில் புதன்கிழமை வரை 1636 விவசாயிகளிடம் 31 இலட்சத்து அறுபத்தொட்டாயிரத்து 587 கிலோ கிராம நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

N5