செய்திகள்

வவுனியாவில் புகையிரதக் கடவை காப்பாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் (Photos)

வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக புகையிரதக் கடவைக் காப்பாளர்கள் இன்று (9.4) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20 மாதங்களாக மதவாச்சியில் இருந்து மன்னார் புகையிரத பாதையிலும் வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலுமான புகையிரத பாதையில் கடவை காப்பாளர்களாக பணிபுரிபவர்களுக்கு 7500 ரூபாவே சம்பளம் வழங்கப்படுவதாகவும் நிரந்தரமற்ற வேலையாக காணப்படுவதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது சம்பளத்தை உயர்த்த வேண்டாம் எனவும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா புகையிர நிலையத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு கூடிய புகையிரத கடவை காப்பாளர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறும் நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனவும் 7500 சம்பளம் பெற நாங்கள் என்ன அடிமைகளா என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக அகில இலங்கை பொது ஊழியர் சங்கமும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தது.

இந் நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் கலைந்து சென்றிருந்தனர்.

a1

a2