செய்திகள்

வவுனியாவில் பெண், ஆணின் சடலங்கள் மீட்பு

நேற்றையதினம் வவுனியா மகாகச்சக்கொடி கிராமம் மற்றும் ஈரப்பெரியகுளம் பகுதிகளிலிருந்து ஆண், இளம் பெண் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மகாகச்சக்கொடி கிராமத்திலுள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து அப்பகுதியை சேர்ந்த இசுரிகா செவ்வந்தி என்ற 20 வயதுடைய குடும்பபெண்ணின் சடலத்தை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த புகையிரத கடவை பாதுகாப்பு ஊழியராக கடமையாற்றும் மனோஜ் பியந்த கேவகே என்ற 47 வயதுடைய நபர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம் மரணங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.