செய்திகள்

வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு தினம்

வவுனியாவில் மாவீரன் பண்டார வன்னியனின் 214 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தேசிய வீரன் பண்டாரவன்னியனின் நினைவுத்தூபியில் நினைவுத்தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வன்னியின் இறுதி மன்னனாகிய பண்டார வன்னியன் பிரித்தானியருடன் போரிட்டு மடிந்தவனாவான். அவரை நினைவு கூறும் இந்நிகழ்வை வவுனியா நகரசபையும், பண்டாரவன்னியன் நற்பணி மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. குறித்த பண்டார வன்னியன் சிலை நிறுவதற்கு காரணமாக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணியும், மூத்த சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம், மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹன புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களாக ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வவுனியா வர்த்தகர் சங்க செயலாளர் ஜி. ஸ்ரீஸ்கந்தாராஜா, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சந்திரகுமார், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

IMG_2188 IMG_2127 IMG_2140 IMG_2144 IMG_2147 IMG_2155 IMG_2172 IMG_2182

N5