செய்திகள்

வவுனியாவில் ரோந்து சென்ற பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு: அதிகாரி ஒருவர் படுகாயம்

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே இனந்தெரியாதோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக காலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.