செய்திகள்

வவுனியாவில் 18 வயது யுவதியின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

வவுனியா பட்டைக்காட்டுப்பிரதேசத்தில் வீடொன்றின் கிணற்றில் இருந்து 18 வயதுடைய யுவதியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கணரட்னம் லக்சிகா என்பவரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் சடலத்தை பார்வையிடடு விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதணைக்காக சடலத்தை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்திருந்தார்.

இதேவேளை இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.