செய்திகள்

வவுனியாவில் 4 கிலோ கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்

வவுனியாவில் 4 கிலோ கஞ்சாவுடன் கைதான இளைஞர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில் இருந்து கொழும்பு நோக்கி 4 கிலோகிராம் கஞ்சாவுடன் பேரூந்து ஒன்றில் பயணம் செய்த இளைஞரது பொதியை வவுனியாவில் பேரூந்து தரித்து நின்ற போது சோதனை செய்ததில் அதில் 4 கிலோ கஞ்சா இருந்து நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பொதிக்குரிய இளைஞரை கைது செய்த வவுனியா பொலிசார் அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.