செய்திகள்

வவுனியா அரச அதிபரை இடமாற்றக்கோரி வடமாகாண சபையில் இரு மணி நேர போராட்டம்

வடமாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்கிழமை இரு மணிநேர போராட்டத்தின் பின்னர் ஆரம்பமாகி அரச அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கருத்துப் பதிவோடு ஜூலை 23 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சபை அமர்வு இன்றையதினம் ஆரம்ப மாக இருந்த வேளை வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யாததை கண்டித்து சபா மண்டபத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்காது சபா மண்டப வாயிலில் அமர்ந்து மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.

இரண்டு மணித்தியால போராட்டத்தின் பின்னர் வவுனியா அரச அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என கருத்தினை பதிவிடும் நோக்குடன் இன்றைய சபை அமர்வு ஆரம்பமானது.  அரச அதிபர் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தினை மாகாண சபை உறுப்பினர்கள் பதிவு செய்த பின்னர் சபை அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.