செய்திகள்

வவுனியா டொவொஸ்கோ இல்ல சிறுவர்களுக்கு ” நம்பிக்கை ஒளி” உதவி (படங்கள்)

யுத்த காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் பெற்றோரின் ஆதரவின்றியிருந்த பிள்ளைகளில் 77 பேரை தற்போது அருட்சகோதரிகளின் பராமரிப்பில் வவுனியா டொவொஸ்கோ இல்லத்தில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு வசிக்கும் பிள்ளைகளுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பதற்கு போதுமான நிதி இன்மையால் பல்வேறுபட்ட சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக இல்லத்துக்கு பொறுப்பான அருட்சகோதரி நம்பிக்கை ஒளி நிறுவனத்துக்கு கடிதம் மூலம் உதவிகோரியிருந்தார்.

இதற்கமைவாக லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி தன்னார்வ நிறுவனத்தின் இணை நிறுவனமாக தாயகத்தில் இயங்கும் இணைக்கும் இதயங்கள் அறக்கட்டளையின் ஊடாக குறித்த பிள்ளைகளின் நிலை அறிந்து அவர்களுக்கு தற்போது அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்களான பாதணிகள், அவர்களுக்கு தேவையான ஆடைகள் , படுக்கை விரிப்புக்கள், தலையணைகள், குடைகள், தேணீர்கோப்பைகள், மற்றும் அவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான கணிகளும் வழங்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் இணைக்கும் இதயங்கள் இறக்கட்டளையின் தலைவர் கே.சிவகாந்தன், மற்றும் நம்பிக்கை ஒளி நிறுவனம் சார்பாக பஞ்சலிங்கம் சுபாஸ்கரன் உற்பட இந் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்து கொண்டு ஆதரவின்றி இருக்கும 77 பிள்ளைகளுக்கு அத்தியவசியமாக தேவைப்படும் பொருட்கள் கையளிக்கப்பட்டது.

Ray of Hope  (3) Ray of Hope  (4) Ray of Hope  (5) Ray of Hope  (6)