செய்திகள்

வவுனியா தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் தனியார் பேரூந்து சாரதிகள், நடத்துனர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

வவுனியா பஸ்நிலையப் பகுதியில் பயணி ஒருவரை ஏற்றுவது தொடர்பில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சாரதி, நடத்துனர்களுக்கிடையில் செவ்வாய்கிழமை காலை முரண்பாடு ஏற்பட்டிருந்தது. இதில் காயமடைந்ததாக இலங்கை போக்குவரத்து சாரதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அதேவேளை, தனியார் பேரூந்து சாரதி, நடத்துனர் ஆகிய இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தம்மால் இலங்கை போக்குவரத்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை எனவும், இலங்கை போக்குவரத்துச்சபை மற்றும் தனியார் பேரூந்து ஆகியவற்றுக்கிடையில் இணைந்த சேவை அட்டவணை ஒன்று தயாரித்து அதன் அடிப்படையில் வழி அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தும் இந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல பிரதேசங்களுக்கும் செல்கின்ற பயணிகள் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

IMG_1490

 N5