செய்திகள்

வவுனியா நகரசபை சிறுவர் பூங்காவில் குவிந்து கிடக்கும் குப்பைகள்

வவுனியா நகரசபை சிறுவர் பூங்காவில் நீண்ட நாட்களாக குவிந்து கிடக்கும் குப்பைகளால் பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
வவுனியா நகரசபை சிறுவர் பூங்கா துப்பரவு செய்த போது குவிக்கப்பட்ட குப்பைகள் கடந்த பல நாட்களாக அங்கிருந்து அகற்றப்படாது அவ்விடத்திலேயே குவிந்து இருப்பதால் அப் பூங்காவிற்கு வரும் சிறுவர்கள், புகைப்பட மற்றும் வீடியோ பிடிப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன் நுளம்பு பெருக்கம் காரணமாக நோய்கள் ஏற்பட கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.