செய்திகள்

வவுனியா நகரசபை சுகாதார ஊழியாகள் ஆர்ப்பாட்டம்

வவனியா நகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று வவுனியா நகரசபையின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுகாதார ஊழியாகளாக கட்த 5 வருடங்களுக்ம் மேலாக பணியாற்றும் 7 சுகாதார சுகாதார ஊழியாகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்தே இவ் அர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வட மாகாணத்திற்கு மாத்திரம் சுகாதார தொழிலாளாகளுக்கு சாதாரணதரம் உயர்கர கல்வி கேட்கப்படுகின்றது வட மாகாண இலங்கையில் இல்லையா, வேறு மாகாணங்களில் அழுல்படுத்தப்படும் கல்வி தகுதியை வடக்கிலும் அழுல்படுத்து, உள்ளக வெற்றிடம் உள்ளக வெற்றிடம் உள்ளக தொழிலாளாகளுக்கு வழங்கப்படவேண்டும் போன்ற கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

இதேவேளை 7 சுகாதார ஊழியர்களுக்கும் நியமனம் வழங்கப்படும் என பலதடவைகள் வட மாகாண அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்காது விட்டால் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தனர்.

இதன்போது 7 சுகாதார தொழிலாளர்களுக்கும் சார்பாக ஏனைய சுகாதார தொழிலாளாகளும் பங்கேற்றிருந்ததுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு;பட்டவர்களுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகதாரலிங்கம் மற்றுமு; வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன் ஆகியோரும் கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றினுள் செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியிருந்த நிலையில் அங்கு பிரசன்னமாகிய வட மாகாண சுகாதார அமைச்சர் அவர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது இவ்விடயம் தொடுர்பாக உள்ளுராட்சி அமைச்சராகவுள்ள வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடி நல்ல முடிவினை மிக விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

1 (3)