செய்திகள்

வவுனியா நகர விடயங்கள் தொடர்பில் வட மாகாண உறுப்பினர்களுடன் வரியிறுப்பாளர்கள் சந்திப்பு (படங்கள்)

வவுனியா நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள பல்வேறு விடயங்கள் மற்றும் நகரசபையில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பில் வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களுடன் நகர வரியிறுப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இன்று காலை வட மாகாண சுகாதார அமைச்சின் வவுனியா மாவட்ட உப அலுவலகத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இதன்போது வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் அறவிடப்படும் வரிகளில் உள்ள பிரச்சனைகள் மற்றும் அவற்றின் கடந்தகால ஆவணங்கள் உரிய முறையில் பாதுகாக்கப்படாமை உள்ளிட்ட நகரின் அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன் போதும் தற்போது வருமான வரியை அறவிடப் பயன்படுத்தும் 2009 ஆம் ஆண்டு வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளின் வரி அறவீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு ஆவணங்கள் நகரசபையிடம் இல்லாமையால் அவற்றில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சருக்கு தெரியப்படுத்தி அது தொடாடபான விசாரணைகளை மேற்கொள்வது எனவும் மீள மதிப்பீடுகளை மேற்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜா, பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பி.எஸ்.குமார, வவுனியா நகரசபைச் செயலாளர் க.சத்தியசீலன் மற்றும் வரியிறுப்பாளர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tax vavuniya (1)