செய்திகள்

வவுனியா பிரதேச சபையின் தலைவருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

வவுனியா தமிழ் தெற்கு பிரதேசசபையின் தலைவருக்கு எதிராக மறவன்குளம் மக்களால் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு மகஜர் கையளிக்கப்பட்டு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மறவன்குளம் கிராமத்தில் பிரதான வீதி மற்றும் குடிநீர் பிரச்சனைகள் உட்பட பல்வேறு செயற்பாடுகளை வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபை செய்து தரவில்லை என தெரிவத்து வவுனியா நெளுக்குளத்தில் உள்ள பிரதேச சபைக்கு முன்பாக கூடியிருந்தனர்.

இந் நிலையில் பிரதேசசபையின் தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட அக் கிராம மக்கள் தயாரான போது பிரதேசசபையின் தலைவர் க. சிவலிங்கம் மக்களை அழைத்து கலந்துரையாடலொன்றினை நடத்தியிருந்தார்.

இதன்போது கிராமத்தின் சார்பில் அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று தலைவரிடம் கையளிக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தின் நிலை தொடுர்பில் மக்கள் வாதத்தில் ஈடுபட்டடிருந்தனர்.

இந் நிலையில் கிராமத்தின் நிலைப்பாடு தொடர்பில் இது வரை தனன்னிடம் எவரும் முறையிடாமையினால் தொடர்ந்து வரும் காலங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒழுங்குகளை செய்வதாக பிரதேச சபையின் தலைவர் உறுதியளித்தீருந்த நிலையில் பொது மக்கள் கலைந்து சென்றிருந்தனர்.

DSC00941