செய்திகள்

வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை: 8 பேர் 9ஏ சித்தி

தற்போது வெளிவந்துள்ள கல்விப்பொது தராதரப் பத்திர சாதாரணதரப் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி முன்னிலையில் உள்ளது.

இந் நிலையில் எட்டு மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்திபெற்றுள்ளனர். இவர்களில் மூவர் ஆங்கில மொழிமூலம் பரீட்சைக்கு தோற்றியவர்களாவர்.

அஜந்தி யோகராஜா, மோஜிதா முத்துராசா, தட்சாயினி கணேசன், ஜதிநிலா பாஸ்கரன், பாத்திமா பைசா தௌபிக் ஆகியோர் தமிழ் மொழி மூலம் 9 ஏ சித்திகளையும் தர்சா சிவபாலராஜா, பூஜிதா ஜெயக்குமார், அபிரா ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் ஆங்கில மொழிமூலம் 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை, திவ்யா வேதநாதன், நிலக்சிகா ரஞ்சன், கஜலக்சி ராமச்சந்திரன், ஜதுர்சிகா யோகரட்ணம், தனுசியா தவராஜா, பூஜா சபேசன், கம்சாயினி கண்ணன், மதுசா ஸ்ரீசேன, கேசாம்பவி கோடீஸ்வரன், டிலக்சனா சதீஸ்குமார், டிலக்சனா தயாபரன் ( ஆங்கில மொழி மூலம்) ஆகியோர் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் பி சித்தியும் பெற்றுள்ளதுடன், தவதன்ஜா ரவிச்சந்திரன், ரஞ்சினி கமலதாசன் ( ஆங்கில மொழி மூலம்), விதுட்சா வேலும்மயில் (ஆங்கில மொழி மூலம்) ஆகியோர் 8 பாடங்களில் ஏ சித்தியும் ஒரு பாடத்தில் சி சித்தியும் பெற்றுள்ளனர்.

N5