செய்திகள்

வவுனியா மே தின நிகழ்வுகள்

வவுனியாவில் மே தின நிகழ்வுகள் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்திற்கு முன்பான ஊர்வலத்துடன் ஆரம்பமான மே தின நிகழ்வுகளில் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், நெல்லின் விலையை குறைக்காதே, தொழிலாளர் நீதிமன்றத்தை நிறுவு, மாற்று அரசியலை முன்னெடுப்போம் மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம், இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு கொடு, விவசாயிகளின் கடனை இரத்துச்செய் போன்ற கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

ஊர்வலம் வவுனியா கடை வீதி வழியாக சென்று வவுனியா நகரசபை மண்டபத்தை சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.

DSC03373 DSC03399