செய்திகள்

வவுனியா வடக்கில் மலசலகூடங்கள் அமைப்பதற்கு வடக்கு புனர்வாழ்வு அமைச்சினால் நிதி வழங்கல்

வவுனியா வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விசேட தேவையுடையவர்களின் குடும்பங்களுக்கான விசேட மலசலகூடங்கள் அமைப்பதற்கான நிதியுதவி வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சினால் அண்மையில் வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட மேற்படி 30 குடும்பங்களுக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டது. ஏற்கனவே வடக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட விசேடதேவையுடையவர்களில் 217 குடும்பங்களுக்கு மலசலகூடம் அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்டமாக மேலும் 321 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின் உதவிச்செயலாளர் எஸ்.ஜெனிற்றன், வடக்கு பிரதேச செயலாளர் க.பரந்தாமன், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ.வாசன், மாகாண சுகாதார அமைச்சரின் வடக்கு பிரதேச இணைப்புச்செயலாளர் சஜீவன் உட்பட வடக்கு செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

IMG_0388

N5