செய்திகள்

வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி

சுவிஸ் நாட்டை சேர்ந்த போதகருக்கு கோரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில் வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் கணேசபுரம் பகுதியை சேர்ந்த நபர் உட்பட சுவிஸ் மதபோதகருடன் நெருங்கி பழகிய 20 பேர் அடையாளம் காணப்பட்டு யாழ் காங்கேசன் துறையில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் கடந்த மாதம் 23 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் யாழில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த ஊழியர் சுவிஸ் போதகரால் யாழ்பாணம் அரியாலையில் நடாத்தப்பட்ட ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.குறித்த நபர் ஆராதனை கூட்டத்தில் கலந்து கொண்டமையினால் அவருடன் இணைந்து பணியாற்றிய மேலும் சில ஊழியர்களும் கடந்த சில நாட்களாக சுய தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.அத்துடன் சுவிஸ் நாட்டை சேர்ந்த போதகருக்கு கோரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அரியாலையில் இடம்பெற்ற ஆராதனை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த வடக்கின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.(15)