செய்திகள்

வஹாப் ரியாசின் அதிவேகப்பந்துகளும், பாக்கிஸ்தான் தவறவிட்ட வாய்ப்புகளும்

2015 உலககிண்ணம் முழுமையாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.வியாழக்கிழை அவுஸ்திரேலிய இந்தியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதியாட்டம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பு எல்லையற்றது.

அவுஸ்திரேலிய – பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியும்  ஓரு சந்தர்ப்பத்தில் சூடு பிடிக்கப்பார்த்தமை குறிப்பிடத்தக்கது. ஓருநாள்போட்டிகளில் மிகவேகமான பந்துவீச்சை இன்று வீசியிருந்தார் வஹாப் ரியாஸ்.

ஓரு வருடத்திற்கு முன்னர் ஜோன்சன் அவ்வாறான பந்துவீச்சினை இங்கிலாந்திற்கு எதிராக வீசிய வேளை ஆஸி அணியினர் அதனை இரசித்தனர் இன்று அவர்களே அதனை எதிர்கொள்ளநேர்ந்தது. ஆனால் இன்று வஹாப்பிற்கு துணையாக பந்துவீசுவதற்கு பாக்கிஸ்தான் அணியில் எவரும் இருக்கவில்லை. பாக்கிஸ்தான் அணி 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்ததால், ஆஸி அணியை தோற்கடிப்பதற்காக ரியாஸ் தனது முழுவேகத்தில் பந்து வீசி விக்கெட்களை சாய்க்கவேண்டிய நிலையிலிருந்தார்.

அவர் இன்று தன்னால் எவ்வளவு வேகமாக பந்துவீச முடியுமோ அவ்வளவிற்கு பந்துவீசினார். ஓரு வருடத்திற்கு முன்னர் ஜோன்சன் இங்கிலாந்து அணியை நடுங்கவைத்த அதே ரிவர்டொரன்ஸ் முனையிலிருந்து ஜோன்சன் போன்றே பந்தவீசினார் வஹாப்.ஆஸி அணி 2 விக்கெட்களை 30 ஓட்டங்களுக்குள் இழந்தது.

Australia v Pakistan: Quarter Final - 2015 ICC Cricket World Cup

இதுவரை இந்த உலககிண்ணம் துடுப்பாட்ட வீரர்கள் அடித்துநொருக்குவதையே பார்த்துள்ளது.ஆனால் இன்று வஹாப் துடுப்பாட்ட வீரர்கள் எதிர்பாரத அந்த வேகத்தில் பந்து வீசினார்.அவரது வேகம் மணிக்கு 150 கிலோமீற்றரை கடந்தது.அனேக பந்துகள் பவுன்சர் பந்துகளுக்கு சமமானவை.

கிளார்க்கிற்கு ஓரு அற்புதமான பந்தை வீசி அவரை பின்வரிசை துடுப்பாட்ட வீரர் போல வெளியேற்றினார்.  நான் ஓரு நாள் கிரிக்கெட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்த சிறந்த பந்துவீச்சு என பின்னர் கிளார்க் ஏற்றுக்கொண்டார்.

அதன் பின்னர் களத்திற்கு வந்த சேன்வட்சன் வஹாப்பின் வேகத்தை எதிர்கொள்ள நேரிட்டது.ஓரு ஓவரிற்கு ஓரு பவுன்சரை வீசிய அவர் வட்சனின் கைகாப்பினை பல முறை பதம் பார்த்தார்.இடையிடையே அவருடன் சொற்போரிலும் வஹாப் ஈடுபட்டார்.

பொறுமையிழந்து வட்சன் அவரை குக்சொட் விளையாடிய வேளை கிடைத்த வாய்ப்பை ரஹாட் அலி தவறவிட்டார்.ஏமாற்றமடைந்த வஹாப் சீற்றத்தில் கூச்சலிட்டார், அந்த கட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் ஆஸி அணி 4 விக்கெட்டிற்கு 88 என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும்.அவ்வேளை வட்சன் 4 ஓட்டத்தினையே பெற்றிருந்தார்.

இதன் பின்னர் வஹாப்பின் பந்துவீச்சில் இன்னொரு வாய்ப்பு தவறவிடப்பட்டது.மக்ஸ்வெல்லை சொகைல்கான் தவறவிட்டார். பாக்கிஸ்தானிற்கு கிடைத்த இறுதி வாய்ப்பு அதுதான்.அவர்கள் 2015 உலககிண்ணப்போட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.