செய்திகள்

வாகனத்தில் இருந்து பாதி எரிந்த சடலம் மீட்பு

வாகனம் ஒன்றில் இருந்து பாதி எரிந்த நிலையில் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அதுருகிரிய – அரங்கல – கஹத்தோட வீதியில் நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதுää வேன் ஒன்றில் சடலத்துடன் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதுää இந்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் பிலியந்தல பகுதியில் வைத்து கைதாகியுள்ளனர்.

காலி – பொத்தல பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளதோடுää இவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற ஒருவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வீடொன்றில் வைத்து இவரைத் தாக்கி டயரை வைத்து எரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கள்ளத் தொடர்பே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.