செய்திகள்

வாகன விபத்தில் கஜேந்திரன் காயம்

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் வாகன விபத்தொன்றில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாவகச்சேரிக்குச் சென்றுவிட்டு யாழ்ப்பாணத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, கைதடி பகுதியில் பாரம் தூக்கும் கரனகர வாகனம் ஒன்றுடன் ஏற்பட்ட விபத்தில் அவர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது,

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய 39 வயதுடைய கஜேந்திரன், கூட்டமைப்பில் இருந்து பிரிந்துள்ள கஜேந்திரகுமாருடன் இணைந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளராகச் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

kajendran_acci_01 kajendran_acci_03