வாகன விபத்தில் பெண்ணொருவர் பலி! 12 பேருக்கு காயம் (படங்கள்)
கல்கமுவ திவுல்லேவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் (04.04.2015) இரவு 10 மணியளவில் அநுராதபுரம் நோக்கி சென்ற வான், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் தூக்கக் கலக்கத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனா்.
வானில் 17 பேர் பயணித்துள்ளதாகவும் விபத்தில் காயமடைந்த 13 பேர் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அதில் சிகிச்சை பலனின்றி 82 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் 11 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இதில் 4 பெண்களும் 2 வயது குழந்தையும் அடங்குவதாக விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் கல்கமுவ பொலிஸார் தெரிவித்தனா்.