செய்திகள்

வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் பலி

பன்னல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பகுதியில் மரண வீடொன்றுக்கு சென்று சீதுவை நோக்கி பயணித்தக்கொண்டிருந்த சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான வேனொன்று கொள்கலன் வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதிலேயே இந்த உயிரிழப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு;ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.