செய்திகள்

வாகன விபத்தில் 2 பொலிஸார் பலி

கண்டி-மஹியங்களை  வீதியில் உடுதும்பர பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை மேலும் மூவர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பயணித்த வானும் எதிரே வந்த டிப்பர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதினாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கலஹா  பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இவர்கள் மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.