செய்திகள்

வாக்களிப்பை தடுக்க இராணுவம் பயன்படுத்தப் படலாம்: மைத்திரி அச்சம்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தினமன்று நாட்டின் சில பகுதிகளில் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக இராணுவத்தை அரசாங்கம் பயன்படுத்தலாமென எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று அச்சம் வெளியிட்டுள்ளார்.
தேர்தலை குழப்புவதற்காக பொலனறுவைக்கு இராணுவம் ஏற்கனவே அனுப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சகல மாவட்டங்களில் படையினர்தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,என சிறிசேனதெரிவித்துள்ளார்.
வடக்கில் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக சீருடையணியாத படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மைத்திரிபால தெரிவித்துள்ளார்.