செய்திகள்

வாக்களிப்பை தடுப்பதற்காக வடக்கில் வீதிதடைகளை அமைத்துள்ள இராணுவம்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பிற்கு முன்னதாக வாக்காளர்களை அச்சுறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
55 பேர் கொண்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவினர் இன்று செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளனர்.
வடக்கில் முன்னர் யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் தமிழ்மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்காக 400வீதிதடைகளை இராணுவத்தினர் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வாக்காளர்களை தடுப்பதற்காகவே இந்த வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் தெரிவிக்கின்றன,ஆனால் இந்த தேர்தலில் இராணுவத்திற்கு எந்த தொடர்புமில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் நாங்கள் இனிமேல் தான் அதனை பார்வையிடவுள்ளோம் என தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் குரேசி குறிப்பிட்டுள்ளார்.
இறுதி கட்;ட தேர்தல் பிரச்சாரத்தை பார்வையிடுவதற்காக திங்கட்கிழமை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டின் சகல பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் பிரசன்னமாகியிருப்பார்கள்,தேர்தல் சுதந்திரமாகவும், நீதியானதாகவும் நடைபெறும் என பொலிஸார் உறுதியளித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.