செய்திகள்

வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்.மாவட்டத் தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல்

வாக்காளர்களாக இதுவரை தம்மைப் பதிவு செய்யாதவர்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு யாழ்.மாவட்டத் தேர்தல்கள் செயலகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இதுவரையில் தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடனடியாகத் தமது பிரிவுக்குரிய கிராம அலுவலகர் அலுவலகத்துடனோ அல்லது பிரதேச செயலகத்துடனோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த அறிவிப்பையடுத்து இதுவரை தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளாத பலரும் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.விரைவாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விரைவாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து ஒப்படைக்கும் பட்சத்தில் அவர்களின் பெயர்கள் வாக்காளர் இடாப்பில் சேர்க்கப்பட்டு வாக்களிப்பதற்கான அனுமதி வழங்கப்படும்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்;றுக் கொள்ளும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட சகலரும் உடன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒலிபெருக்கிகள் மூலம் யாழ்.குடாநாட்டின் சகல பிரதேச மக்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ்.நகர் நிருபர்