செய்திகள்

வாக்குறுதிகள் அனைத்தையும் அரசாங்கம் மீறுகின்றது: போர்க்கொடி தூக்கும் ஜே.வி.பி.!

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் புதிய அர­சாங்கம் கொடுத்த வாக்­கு­று­திகள் அனைத்தும் மீறப்­பட்­டு­விட்­டன. அமைச்­ச­ரவை எண்­ணிக்­கை­யினை அதி­க­ரித்து, தேசிய அர­சாங்­கத்தை அமைத்­தமை கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று விசனம் தெரி­வித்­துள்ள மக்கள் விடு­தலை முன்­னணி, அரசின் தேசிய நிறை­வேற்று சபையில் இருந்து வெளி­யே­ற­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பலர் அர­சாங்­கத்­துடன் கைகோர்த்­தபின் நிமல் சிறி­பா­லடி சில்வா எதிர்க்­கட்சி தலை­வ­ரா­வாரா எனவும் அக்­கட்சி கேள்வி எழுப்­பி­யது. மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினால் பத்­த­ர­முல்­லையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே ஜே.வி.பி யின் தலைவர் அனுர குமார திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது;

“ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தேசிய அர­சாங்­கத்தின் கட்­ட­மைப்பு தொடர்பில் மக்­க­ளிடம் ஏனைய அர­சியல் கட்­சி­க­ளிடம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர் வாக்­கு­றுதி கொடுத்­தனர். மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வா­தி­கார ஆட்­சி­யினை வீழ்த்தி நாட்டில் ஜன­நா­ய­கத்­தினை கொண்­டு­வர வேண்டும் என்ற பிர­தான காரணம் முன்­வைக்­கப்­பட்­ட­துடன் அமைச்­ச­ரவை கூட்­ட­மைப்பு அதி­கா­ரப்­ப­கிர்வு என முக்­கிய விட­யங்கள் தொடர்பில் பேசினர்.

இதில் தனித்து மகிந்த ராஜ­ப­க்ஷவை மட்டும் வீழ்த்­தி­யது மட்டும் அல்­லாது பிர­தான அமைச்­சர்கள் சில­ருக்கு எதி­ரா­கவும் செயற்­பட்டோம். ஆனால் இன்று அவர்கள் அனை­வ­ரையும் மீண்டும் அமைச்­சர்­க­ளாக தேசிய அர­சாங்­கத்­திற்குள் இணைத்துக் கொண்­டுள்­ளனர்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நம்பி அவரை ஜனா­தி­ப­தி­யாக்­கிய பொது மக்­களை ஏமாற்­றி­விட்டு மீண்டும் ஊழல் அர­சாங்­கத்தை அவர் உரு­வாக்­கி­விட்டார். இன்று அமைச்­ச­ர­வையின் எண்­ணிக்கை 77 ஆக உயர்­வ­டைந்­துள்­ளது. இன்று உரு­வா­கி­யி­ருப்­பது தேசிய அரசு என்று சொல்­கின்­றனர். ஆனால் தேசிய அர­சாங்கம் தமது மக்­க­ளுக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை மீறி­விட்­டது. இனிமேல் இவர்­களை தேசிய அர­சாங்கம் என கூற முடி­யாது.

இவ்­வாறு ஒரு அர­சாங்­கத்தை நடத்த மக்கள் ஆத­ரவு தெரி­விக்­க­வில்லை, மக்கள் விரும்­பவும் இல்லை. ஏனவே அர­சாங்கம் எதிர்­வரும் 23 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்­தினை கலைத்து பாரா­ளு­மன்ற தேர்­தலின் மூலம் புதிய பாரா­ளு­மன்­றத்­தினை அமைக்க வேண்டும்.

அதேபோல் தேசிய நிறை­வேற்று சபையில் நாம் அங்கம் வகிக்­கின்றோம். தேசிய நிறை­வேற்று சபையின் மூலம் பல விட­யங்­களை வெளிக்­கொண்டு வந்­துள்ளோம். ஆனால் நாம் தேசிய அரசில் அங்கம் வகிக்­க­வில்லை. ஆனால் இன்று அர­சாங்­கத்தின் செயற்­பாட்டில் எமக்கு திருப்தி இல்லை. தொடர்ந்தும் தேசிய நிறை­வேற்று சபையில் அங்கம் வகிப்­பது தொடர்பில் நாம் தீர்­மா­ன­மெ­டுப்போம். அதே போல் இவ் தேசிய நிறை­வேற்று சபை தொடர்ந்து நீடிக்கப் போவது இல்லை. எனவே அவ­சி­ய­மில்­லா­த­வி­டத்து நாம் வெளி­யே­று­வதே சிறந்த முடிவு.”