செய்திகள்

வாசனைத்திரவியங்களின் அரசி..”ஏலக்காய்”!

ஆமாம்..வாசனைத்திரவியங்களில்…வாசனையும்,மருத்துவக்குணமும், மிக..மிக சுவையும் இன்னும் மேலதிக குணாதிசயங்களும் கொண்டது ஏலக்காய். அதனாலேயே இதை வாசனைத்திரவியங்களின் அரசி என்று அழைக்கின்றனர். இதனை வாயில்ப் போட்டு மென்றால்..வாய் துர் நாற்றமற்று நறுமணம் பெறுகின்றது. தேனீரில்த் தட்டிப்போட்டுக் குடிக்கும் போது அதன் சுவை மேலும் அதிகரிக்கின்றது. ஏலக்காய் செரிமானத்தன்மையை அதிகரிப்பதோடு…ஆரோய்க்கியத்தையும் கொடுக்கின்றது. பசியைத் தூண்டும் வல்லமையும் இதற்கு உண்டு.
 sam-81
 ஏலக்காயை  நசுக்கி சும்மாவே ..பலர் வாயில்ப்போட்டு மெல்வது வழக்கம். இதன் மூலம்..நாவரட்சி,உமிழ் நீர் ஊறுதல்,வெயிலில் அதிகமாகச்சுரக்கும் வியர்வை, அதனால் ஏற்படும் தலைவலி,வாந்தி ,குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக்கோளாறு இன்னும் பலவற்றிற்கு நிவாரணம் கிடைக்கின்றது. ஆனாலும் இதை அதிகமாகப் பயன் படுத்துவது நல்லதல்ல.
 ஏலக்காய்க்கும் மூக்கடைப்பு சிகிச்சைக்கும் நிறையவே சம்பந்தமுள்ளது. ஆமாம்…ஜலதோசம் மூக்கடைப்பால் அவதியுறும் குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ, நான்கு அல்ல ஐந்து ஏலக்காயை நெருப்பிலிட்டு, அதன் புகையை சுவாசிப்பதால் நிவாரணம் கிட்டும். மூக்கடைப்பும் உடனே திறக்கும்.
வெயிலில் அதிகம் திரிபவர்களுக்கு…ஏற்படும் வாந்தி மயக்கம், களைப்பு போன்றவற்றிற்கு ஆறு ,ஏழு ஏலக்காயைத்தட்டிப்போட்டு கசாயமாகக் காய்ச்சி அதனுடன் சிறிது பனை வெல்லம் கலந்து அருந்தினால் பலன் கிடைக்கும்.
sam-82
விக்கலை நிறுத்தும் சக்தி ஏலக்காயிற்கு உண்டு. சிறிது ஏலக்காய்களைத்தட்டி..அதனுடன் நான்கைந்து புதினா இலைகளுடன் அரை ரம்ளர் நீரில் கசாயம் செய்து அருந்தினால் விக்கல் உடனே நிற்கும்.
மனஅழுத்தத்தால் பாதிப்புள்ளவர்களுக்கு ஏலக்காய்த் தேனீர் மிகச்சிறந்த நிவாரணி.அதன் வாசனை மனதிற்கு இதம் அளிக்கும். அதே போல் வாயுத்தொல்லைக்கும் மிக..மிகச் சிறந்த நிவாரணி இந்த ஏலக்காய் ஆகும். ஆகையால்…”ஏலக்காய்” வாசனைத் திரவியங்களின் அரசி என்பதில் ஐயமே இல்லை…!!