செய்திகள்

வாஜ்பாயிக்கு பங்களாதேஷ் அரசு “போர் விடுதலை” விருது வழங்கி கௌரவிப்பு

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு பங்களாதேஷ் அரசு போர் விடுதலை (Award of Liberation War) விருதினை வழங்கிக் கெளரவித்துள்ளது. இந்த விருதை வாஜ்பாய் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் பெற்றுக் கொண்டார். இன்று டாக்காவில் நடந்த விழாவின்போது வாஜ்பாய்க்கு அளிக்கப்பட்ட இந்த. கெளரவத்தை பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார். இது பங்களாதேஷின் உயரிய விருதாகும் இது. பங்களாதேஷ் சுதந்திரப் போராட்டத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டியதற்காக இந்த கெளரவத்தை பங்களாதேஷ் அளித்துள்ளது.

பங்களாதேஷ் ஜனாதிபதி அப்துல் ஹமத் இந்த விருதினை பிரதமர் மோடியிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விருதினைப் பெற்றுக் கொண்ட பின்னர் மோடி கூறுகையில், இது அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் சிறந்த முக்கியமான நாளாகும். தனது வாழ்க்கையை நாட்டுக்காக அர்ப்பணித்தவர் வாஜ்பாய். சாமானிய மக்களின் உரிமைக்காக போராடியவர். என்னைப் போன்ற எத்தனையோ அரசியல்வாதிகளுக்கு, உந்து சக்தியாக திகழ்பவர் என்றார் மோடி.