செய்திகள்

‘வானவில் வாழ்க்கை’ படத்துக்கு இசை பாடி நடிக்கும் அறிமுக நடிகை கெஸான்ட்ரா

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடி பாடல்களுக்கு இசை வாசித்து வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா.

பாடகி நடிகையென தனது சினிமா பயணத்தை தொடங்கியிருக்கும் கெஸான்ட்ரா, தனது முதல் பட அனுபவத்தை இப்படிச் சொல்கிறார்… “வானவில் வாழ்க்கை படத்தில் என் கதாப்பாத்திரத்தின் பெயர் ‘வினிதா’. ஒரு பாடகி. இதில் நான் பாடியுள்ள ‘சூப்பர் கேர்ள்’ பாடல் அனைவரையும் கவரும். இப்பாடலுக்கு பிறகு எனது நண்பர்கள் அனைவரும் என்னை ‘சூப்பர் கேர்ள்’ என்றே அழைக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தமிழ் நன்றாகக் கற்றுகொண்டேன். நடிப்பு, ஆட்டம் என நான் அனைத்தையும் கற்றுகொள்ளும் இடமாய் இருந்தது. இந்த வாய்ப்பை அளித்த ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஓசினா சினி ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கும் எனது நன்றிகள். பாடுவதுதான் எனக்கு மிக பிடித்தமான விஷயம், நல்ல கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன்,” எனக் மென் குரலில் கொஞ்சும் தமிழில் கூறி முடித்தார் கெஸான்ட்ரா.