செய்திகள்

வாய் தகராருடன் திறந்து வைக்கப்பட்ட ஆய்வு கூடம் ( படங்கள்)

DSC00211 DSC00218 DSC00221 DSC00245கல்வி இராஜஙக் அமைச்சினுடன் இணைந்து இ.தொ.கா மற்றும் தொ.தே.ச மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தினை இன்று திறந்து வைத்தனர்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவில் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் நேர அட்டவணையை ஏற்றுக்கொண்டு மத்திய மாகாண விவசாய இந்து கலாசார அமைச்சர் எம்.ராம், மற்றும் இ.தொ.கா மாகாண சபை உறுப்பினருடனும், தொ.தே.ச மாகாண சபை உறுப்பினர்களுடனும் ஆய்வு கூடத்தினை திறந்து வைத்தனர்.

ஆரம்ப பாடசாலைகள், இடைநிலை பாடசாலைகள் ஆகியவற்றை மீளமைக்கும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கபெற்ற காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆய்வூகூடம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் மத்தியில் திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், மத்திய மாகாண இந்து கலாசார அமைச்சர் எம்.ராம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாணசபை உறுப்பினர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு ஆரம்பிக்கும் முன் மலையக மக்கள் முன்னணியின் நுவரெலியா மாவட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பத்மராஜ்க்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிலிப்குமாருக்கும் வாய் தகராரு ஏற்பட்டமை குறிப்பிடதக்கது.